×

லட்சத்தீவு செல்ல முயன்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களுக்கு அனுமதி மறுப்பு!!

கவராத்தி : லட்சத்தீவு செல்ல முயன்ற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களுக்கு லட்சத்தீவு நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக பாஜகவைச் சேர்ந்த பிரபுல் படேல் நியமிக்கப்பட்டதை அடுத்து அங்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் சர்ச்சையை கிளப்பின. இதையடுத்து நிர்வாக ரீதியாக அவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் மக்கள் எதிர்த்தனர். அதுமட்டுமில்லாமல் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் லட்சத்தீவில் நிலவும் சூழல் மற்றும் மக்களின் மனநிலை குறித்து அறிவதற்காக அங்கு செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த Benny Behanan, Hibi Eden ,TN Prathapan ஆகிய காங்கிரஸ் எம்பிக்களுக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இளமாறம் கரீம் தலைமையிலான இடதுசாரி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கும் லட்சத்தீவு நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இவர்களின் பயணம் அரசியல் நோக்கம் கொண்டது என்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என லட்சத்தீவு நிர்வாகம் கூறியுள்ளது.இதையடுத்து லட்சத்தீவு விவகாரத்தை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்….

The post லட்சத்தீவு செல்ல முயன்ற காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களுக்கு அனுமதி மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Lakhativu ,Left Wing ,kavarathi ,lakhativu administration ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்