60 பைக்குகளில் பயணம் செய்து விக்ரமின் 60வது படத்தை கொண்டாடும் ரசிகர்கள்

விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியாகி உள்ள அவரது 60வது படம் மகான். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விக்ரமின்  60வது படம் என்பதால் விக்ரமிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரின் ரசிகர்கள் 60 பேர்  தங்கள் மோட்டார் சைக்கிள்களில் பல குழுக்களாகப் புறப்பட்டு, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று, தாங்கள் மிகவும் நேசிக்கும்  நடிகரின் 60வது திரைப்படத்தின் புகழை பரப்பி வருகின்றனர்.

சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மற்றும் மதுரை முழுவதுமான பகுதிகளில் பைக் ஓட்டி, சியான் விக்ரமின் அன்பையும் நேர்மறை எண்ணத்தையும் மக்களிடம்  பரப்பி வருகிறார்கள்.

Related Stories: