×

நீலகிரியில் இன்று சுற்றுலா தலங்கள் திறப்பு இல்லை கலெக்டர் தகவல்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. 75 நாட்களுக்கும் மேலாகிய நிலையில், 6வது கட்டமாக ஊரடங்கை நீட்டித்த தமிழக அரசு, பல்வேறு தளர்வுகளையும் அறிவித்தது. இதில், நீலகிரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், `நீலகிரி மாவட்டத்தில் இன்று சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது. சுற்றுலா தலங்கள் திறப்பு குறித்து தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பெற்ற பின் திறப்பது குறித்து உரிய முடிவெடுக்கப்படும்’ என்றார்….

The post நீலகிரியில் இன்று சுற்றுலா தலங்கள் திறப்பு இல்லை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Nilgiri ,Corona ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் மற்றும் மலர்கண்காட்சி...