அஜீத்தை அரசியலுக்கு அழைத்தது தவறு: சுசீந்திரன்

சுசீந்திரன் தற்போது இயக்கி உள்ள படம் வீரபாண்டியபுரம், ஜெய், மீனாட்சி நடித்துள்ளனர். ஜெய்யே இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. முன்பு இயக்குனர் சுசீந்திரன் நடிகர் அஜீத் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியிருந்தார். அது தவறு என்ற இந்த விழாவில் பேசும்போது கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ளது.

தெலுங்கில் சுனில் முதற்கொண்டு நிறைய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.  கிராமத்து இசையை முதல் படத்திலேயே அழகாக தந்துள்ளார் ஜெய். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு இப்படம் ஒரு பழிவாங்கும் ஆக்சன் படம். க்ளைமாக்ஸ் ஃபைட் ஜெய்க்கு சூப்பராக வந்துள்ளது.

தமிழை விட தெலுங்கில், இப்படம் பெரிய வெற்றி பெறும் முன்பு அஜித் அரசியலுக்கு வர வேண்டுமென நான் சொன்னது பெரிய வைரலானது. அந்த பிரச்சனையில் நான் டிவிட்டரில் இருந்தே போய் விட்டேன். இப்போது எனக்கு அது தவறு என தோன்றுகிறது. அரசியல் மிக சிக்கலான கடினமான விசயம், அஜித் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார். அது தான் சரி. என்றார்.

Related Stories: