×

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த புது திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோயில் குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு கோயில் அலுவலர்கள் கடிதம்

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள கோயில் குளங்களை சீரமைக்க கோரி கோயில் அலுவலர்கள் அந்தெந்த மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44,121 கோயில்கள் உள்ளன. இதில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு முக்கிய கோயில்களில் 3,500க்கும் மேற்பட்ட தெப்பங்குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் கோயில் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், அந்த சமயத்தில் கோயில் குளங்களை பராமரித்து தண்ணீரை தேக்கி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், வருவாயை காரணம் காட்டி ஒரு சில குளங்களில் பராமரிப்பின்றியும் காணப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோயில் குளங்களை சீரமைக்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோயில் குளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த கோயில்களின் செயல் அலுவலர்கள் சார்பில் மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.  இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னை மாநகரை பொறுத்தவரை கோயில் குளங்கள் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. எனவே, சென்னையில் உள்ள கோயில் குளங்களை ஸ்மாரட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும். ஸ்மாரட் சிட்டி திட்டத்தின் கீழ் வராத பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கோயில் குளங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும். …

The post நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த புது திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோயில் குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு கோயில் அலுவலர்கள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...