சினிமாவில் சகஜநிலை திரும்ப அண்ணாமலையாரை தரிசித்த அருண் விஜய்

இப்போதுள்ள பிசியான நடிகர்களில் அருண் விஜய்யும் ஒருவர். அவர் நடித்துள்ள சினம், அக்னிசிறகுகள், பார்டர், யானை, ஓ மை டாக் படங்கள் அடுத்தடுத்து வெளிவருகிறது. இந்த படங்களின் வெற்றிக்கு வேண்டுதல் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் சுற்றி அண்ணாமலையாரை தரிசனம் செய்தார், அருண் விஜய்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அருண் விஜய் "இறைவனின் அருளோடு  எனது படங்கள் மட்டுமின்றி அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்" என்றார்.

Related Stories: