சினிமா நிருபர் மீது நேஹா ஷெட்டி கோபம்

தெலுங்கில் வெளிவர இருக்கும் படம் டி.ஜே தில்லு. விமல் கிருஷ்ணன் இயக்கத்தில், சித்து, நேஹா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம். பிப்ரவரி 12ம் தேதி, வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, சமீபத்தில் நடைபெற்றிருந்தது.

இந்த படத்தில் நாயகி உடம்பில் உள்ள மச்சம் குறித்து நாயகன் பேசுவது மாதிரியான காட்சி ஒன்று உள்ளது. இதனை குறிப்பிட்டு சினிமா நிருபர் ஒருவர் "நிஜ வாழ்க்கையில், நடிகையின் உடலில், எவ்வளவு மச்சம் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தீர்களா? என்று ஹீரோ சித்துவிடம் கேட்டார். இந்த கேள்வி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து நேஹா தனது டுவிட்டரில் எழுதியிருந்ததாவது: டிரைலர் விழாவில் கேட்கப்பட்ட இந்த கேள்வி, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அவர் கேட்ட கேள்வி, தன்னுடைய பணியிடத்தில், வீட்டில், தன்னைச் சுற்றி இருக்கும் பெண்கள் மீது, அந்த பத்திரிகையாளர் வைத்திருக்கும் மரியாதை என்ன என்பதைத் தான் காட்டுகிறது என்று கூறியிருந்தார். நேஹாவின் இந்த பதிவால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.