×

உலகின் நம்பர் 1 பணக்காரரான அமேசான் தலைவர் ஜெஃப் பிஸோஸ் பதவி விலகல் : விண்வெளி நிறுவனத்தில் கவனம் செலுத்த முடிவு!!

வாஷிங்டன் : அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஜெஃப் பிஸோஸ் விலகி உள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவராக கருதப்படும் ஜெஃப் பிஸோஸ், அமேசான் என்ற நிறுவனத்தை நிறுவி உலகின் மிகப்பெரிய இணைய விற்பனை தலமாக அதனை வளர்த்தெடுத்தார். 27 ஆண்டுகளுக்கு முன்பு கார் நிறுத்தும் இடத்தில் இருந்து தனது அமேசான் நிறுவனத்தை தொடங்கி உள்ளார். வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை தானே பார்சல் செய்து தபால் நிலையங்கள் மூலம் விநியோகித்துள்ளார். ஆன்லைன் புத்தக விற்பனையில் தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனம், தற்போது கணினி மற்றும் காய்கறி விநியோகம் வரை வளர்ந்து நிற்கிறது. படிப்படியாக வளர்ந்த அமேசான் நிறுவனம் தற்போது 119 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. 57 வயதான ஜெஃப் பிஸோஸ் இன்று அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற பதவியில் இருந்து விலகி உள்ளார்.இதையடுத்து அந்நிறுவனத்தின் இணைய சேவை பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஆண்டி ஜேசி அமேசான் நிறுவனத்தின் அடுத்த தலைமைச் செயலாளராக பதவி ஏற்க உள்ளார்.  …

The post உலகின் நம்பர் 1 பணக்காரரான அமேசான் தலைவர் ஜெஃப் பிஸோஸ் பதவி விலகல் : விண்வெளி நிறுவனத்தில் கவனம் செலுத்த முடிவு!! appeared first on Dinakaran.

Tags : Amazon ,Jeff Bezos ,Washington ,America ,Dinakaran ,
× RELATED ஆர்டர் செய்த பொருளுடன் உயிருள்ள...