×

வெற்றிமாறனுடன் இணையும் அமீர்

வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் அமீர். இந்த படத்தில் அமீரின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வெற்றிமாறனுடன் அமீர் கைகோர்க்கிறார். இந்த படத்தில் அமீர் நடிக்கவில்லை. வெற்றிமாறன் தயாரிக்க, அமீர் இயக்குகிறார். ஹீரோவாக யார் நடிக்கிறார் என்பது முடிவாகவில்லை. இந்த படத்துக்கு தங்கம்  என்பவருடன் சேர்ந்து கதை எழுதியுள்ளார் வெற்றிமாறன். இந்த கதைக்கு அமீர் திரைக்கதை எழுதிவிட்டார். சமீபத்தில் படம் தொடர்பான ஆலோசனை நடந்தது.

இதில் பிரபல ஹீரோவை வைத்து இந்த படத்தை அமீர் இயக்குவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வருமாம். இந்நிலையில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை, விரைவில் படப்பிடிப்பு முடிய உள்ளது. அதற்கு பிறகு சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார்.

Tags : Aamir ,Vetrimaran ,
× RELATED என் மீதான குற்றச்சாட்டுக்கும்...