×

கோயில் கொள்ளையன் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெரசாபுரம் பகுதியில் ஸ்ரீஎல்லையம்மன் கோயில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி, புது பாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேல்முருகன் (46) என்பவர் இக்கோயிலின் பூட்டை உடைத்திருக்கிறார். பின்னர் கோயிலுக்குள் புகுந்து, அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க தாலி, வெள்ளி முகக்கவசம், கண்மலர், விபூதிபட்டை, கோரைப் பல், மூக்கு, காது ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு கண்ணந்தாங்கல் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தை சேர்ந்த சுரேஷ், குணசேகரன் என்ற 2 காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 2 மணியளவில் சந்தேக நிலையில் சுற்றிய வேல்முருகனை பிடித்தனர். விசாரணையில், அவர் தெரசாபுரம் அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து கோயிலில் கொள்ளையடித்த தங்கம், வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேல்முருகனை கைது செய்து விசாரிக்கின்றனர்….

The post கோயில் கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Sriellaiyamman temple ,Therashapuram ,Thattanur ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அரசு...