×

திடீர் கர்ப்பிணி ஆன அனுபமா

பிரேமம் படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தெலுங்கு பக்கம் போனவர் அங்கு பெரிய நடிகை ஆகிவிட்டார். சமீபத்தில் ரவுடி பாய்ஸ்’ என்கிற படத்தில் லிப் லாக் காட்சியில் துணிச்சலாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் தான் நிறைமாத கர்ப்பிணியாக தன் தந்தையுடன் நிற்கும் படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது எப்போ நடந்தது என்று பலரும் கமெண்டில் பதிவிட்டாார்கள். பலர் வாழ்த்து சொல்ல தொடங்கி விட்டார்கள். அதன்பிறகு இது ஒரு படத்துக்கான கெட்அப் என்று பதிவிட்டார். ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags : Anupama ,
× RELATED அனுபமா பரமேஸ்வரன் ஃபிட்னெஸ்!