×

அகண்டா 2ம் பாகம் தயாராகிறது

என்.டி.பாலகிருஷ்ணா நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் அகண்டா. அவரின் படங்களிலியே அதிக வசூல் சாதனை படைத்த படம். போயபதி சினு இயக்கிய இந்த படத்தில் ப்ரயக்யா ஜெஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். தியேட்டரில் மட்டுமல்லாது தற்போது ஓடிடியிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் அகண்டாவின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இரண்டாம் பாகத்துக்கான லீடுடன்தான் முதல் பாகம் முடிந்திருந்தது. தற்போது இரண்டாம் பாகத்தின் கதை ரெடியாகி விட்டதாகவும், அதற்கு என்.டி.பாலகிருஷ்ணா ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது வேறொரு படத்தை இயக்கி வரும்  போயபதி சீனு அந்த படத்தை முடித்து விட்டு அகண்டா 2ம் பாகத்தை தொடங்குவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் அகண்டா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்த வருகிறது.

Tags : Akanda ,
× RELATED மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில்...