சினிமாவில் 10 ஆண்டுகள்: டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ். 2012ஆம் ஆண்டு வெளியான ‘பிரபுவின்டே மக்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கடைசியாக மின்னல் முரளி படத்தில் நடித்திருந்தார்.டொவினோ தாமஸ் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு,  முதன்முறையாக நான் சினிமா கேமரா முன் நின்றேன். 10 ஆண்டுகளில், ஏராளமான திரைப்படங்களும், கதாபாத்திரங்களும் கடந்து போய்விட்டன. இன்று என் வாழ்க்கை மாறிவிட்டது. சினிமா மாறிவிட்டது, பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், சினிமா மீதான என் ஆர்வமும் காதலும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன.

வளர்ச்சிக்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது என்பதை நான் அறிவேன். அதைச் சிறப்பாகச் செய்ய எப்போதும் இடம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பாக செய்வதற்கு என்ன தேவையோ அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் நான் அறிவேன். எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்கிறார்.

Related Stories: