குழந்தைக்கு தாய்பாலூட்டும் படத்துக்கு விமர்சனம்: ஈவ்லின் ஷர்மா பதில்

பாலிவுட் நடிகை ஈவ்லின் ஷர்மா சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். கடந்த வாரம்  தனது குழந்தைக்குப் தாய் பாலூட்டும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.  இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. தாய்பால் கொடுக்கும் படத்தை வேறு கண்ணோட்டத்தோடு பார்ப்பது ஆண்களுக்கே அவமானம் என்றும், இன்ஸ்ட்டாகிராம் பாலோயர்களை அதிகப் படுத்துவதற்கு இரு ஒரு தந்திரம் என்றும் கருத்துகளை பகிர்ந்து வந்தார்கள்.

இதற்கு பதில் அளித்து ஈவ்லின் சர்மா கூறியிருப்பதாவது: இந்தப் படங்கள் பாதிப்பையும் வலியையும் காட்டுகின்றன. நான் அதை அழகாக காண்கிறேன். தாய்ப்பால் மிகவும் இயற்கையான ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். உண்மையில் பெண்களுக்கு முதலில் மார்பகங்கள் இருப்பது இதற்குத்தான். என்கிறார்.

Related Stories: