×

‘ப்ராமிஸ்’ படத்தில் உண்மைச் சம்பவம்

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘ப்ராமிஸ்’. அருண்குமார் சேகரன் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ளார். வினோத்குமார் ஒளிப்பதிவு செய்ய, சரவண தீபன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீராம் விக்னேஷ் எடிட்டிங் செய்ய, அகிலா நடனப் பயற்சி அளித்துள்ளார். பாலா பாடல்கள் எழுதியுள்ளார்.

முக்கிய வேடங்களில் நதியா சோமு, சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார், கலைவாணி நடித்துள்ளனர். சங்கமித்ரன் புரொடக்‌ஷன்ஸ், அம்மன் ஆர்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. பர்ஸ்ட் லுக்கை சேரன், நட்டி நட்ராஜ் இணைந்து வெளியிட்டனர். படம் குறித்து அருண்குமார் சேகரன் கூறுகையில், ‘ஒரு கணவன், மனைவி மற்றும் காதலர்களுக்குள் இருக்கும் ப்ராமிஸ் அதிக மதிப்பு கொண்டது.

ஒருகட்டத்தில் அந்த ப்ராமிஸ் உடையும்போது, வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பது கதை. வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, குடியாத்தம், வாணியம்பாடி, ஒடுகத்தூர், அணைக்கட்டு, பிச்சாவரம், கடலூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்.

Tags : Arunkumar Sekaran ,Vinothkumar ,Saravana Deepan ,Sriram Vignesh ,Akila ,Bala ,Nadiya Somu ,Sujan ,Amrish ,Pratap ,Gokul ,Sundaravel ,Rajkumar ,Kalaivani ,Sangamithran Productions ,Amman Art Creations ,Cheran ,Natty Nataraj ,
× RELATED சாரா அர்ஜூனை உருக வைத்த நபர்