×

நாளை முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி: 50 சதவீத இருக்கைகளில் மட் டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும்

சென்னை: நாளை முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து செயல்பட்டு வந்தது. இதன்பிறகு கூடுதலாக 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் பெருமளவு நீங்கியுள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் நாளை முழு அளவில் பேருந்து சேவை தொடங்கவுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து தொடங்கும் நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகளில் மட் டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும். குளிர்சாதன பேருந்துகளை குளிர்சாதன வசதியின்றி இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post நாளை முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி: 50 சதவீத இருக்கைகளில் மட் டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Mut Dume ,Chennai ,Thiruvallur ,Kancheepuram ,Chengalpattu ,Mud Dume ,
× RELATED ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது...