பண்ணை வீட்டில் உடல்கள் அடக்கமா? நீதிமன்றத்தில் சல்மான் கான் வழக்கு

மும்பை: தனது பண்ணை வீட்டில் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வழக்கு தொடர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் சல்மான் கானுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடப்பதாகவும் திரையுலகை சேர்ந்த பலர் மரணிக்கும்போது அவர்களின் உடல் இங்கு அடக்கம் செய்யப்படுவதாகவும் இதே பகுதியை சேர்ந்த கேத்தன் கக்கட் என்பவர் புகார் கூறியிருந்தார். இது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கேத்தன் கக்கட்டிற்கு எதிராக சல்மான் கான் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சல்மான் கான் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சல்மான் கானின் பண்ணை வீட்டுக்கு அருகே கேத்தன் கக்கட் என்பவர் நிலம் வைத்திருக்கிறார். அவர் வேண்டுமென்றே சல்மான் மீது அவதூறுகளை பரப்பியுள்ளார். அவர் மதம் தொடர்பாகவும் தவறாக பேசியிருக்கிறார். கேத்தன் கக்கட் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார். இதையடுத்து இந்த வழக்கில் பதிலளிக்க கோரி கேத்தன் கக்கட்டிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: