×

அமேசானில் ஜேம்ஸ் பாண்ட் படங்கள்

சென்னை: ஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் படங்கள் அனைத்தும் அமேசான் ஓடிடி தளத்தில் திரையிடப்படுகிறது. 1962ல் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம், டாக்டர் நோ என்ற பெயரில் வெளிவந்தது. தொடர்ந்து ஃபிரம் ரஷ்யா வித் லவ், கோல்ட் ஃபிங்கர், தண்டர்பால், யு ஒன்லி லைவ் ட்வைஸ், கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், கேசினோ ராயல், ஸ்கைஃபால், நோ டைம் டு டை உள்பட மொத்தம் 25 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவந்துள்ளன. இதில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த நோ டைம் டு டை படத்தை தவிர்த்து மற்ற அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களும் அமேசானில் பார்க்கலாம். இது ஜேம்ஸ்பாண்ட் பட ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

Tags : James Bond ,Amazon ,
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...