×

டெல்லி விமான நிலையம் ஏன் இவ்வளவு மோசம்? பாகுபலி ராஜமவுலி வேதனை

சென்னை: டெல்லியில் உள்ள விமான நிலையத்தின் பராமரிப்பு பற்றி பாகுபலி இயக்குனர் ராஜமவுலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், லுப்தான்சா விமானம் மூலம் அதிகாலை 1 மணிக்கு டெல்லி வந்திறங்கினோம். ஆர்டிபிசிர் சோதனைக்கான படிவத்தை நிரப்ப சொன்னார்கள். அனைத்து பயணிகளும் தரையில் உட்கார்ந்தும், சுவற்றில் வைத்தும் அந்தப் படிவங்களை நிரப்பினார்கள். இக்காட்சியை பார்ப்பதற்கே வேதனையாக இருந்தது. ஆங்காங்கே மேஜைகளை வைப்பது ஒரு சாதாரண அடிப்படை சேவை. அதைக்கூட செய்யாவிட்டால் எப்படி? மேலும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா மீதான முதல் பார்வை எப்படி இருக்கும். …

The post டெல்லி விமான நிலையம் ஏன் இவ்வளவு மோசம்? பாகுபலி ராஜமவுலி வேதனை appeared first on Dinakaran.

Tags : Delhi Airport ,Baahubali ,Rajamouli Angam ,CHENNAI ,Rajamouli ,Delhi ,Lufthansa ,Baahubali Rajamouli Agony ,
× RELATED டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி...