வலிமை வெளிவரும் முன்பே அஜீத்தின் அடுத்த பட பணிகள் தொடங்கியது

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. இதனை  போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜீத் , ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைகிறது. புதிய படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணி ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி உள்ளது. மார்ச் மாதம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

Related Stories: