×

கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள்: பாரத் பயோடெக் நிறுவனம் வெளியீடு

டெல்லி: கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த தடுப்பூசியாது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி 93.4 சதவீதம் செயல் திறன் கொண்டதாக உள்ளது.  130 கொரோனா நோயாளிகளிடம் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்தி முடித்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது. 
கொரோனா அறிகுறிகள் உள்ள நோயாளிகளிடம் கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என்றும் டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடம் கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள்: பாரத் பயோடெக் நிறுவனம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Phase ,Bharat Biotech ,Delhi ,Dinakaran ,
× RELATED 3ம் கட்ட கலந்தாய்வு