×

கொரோனாவால் வாழ்வாதாரம் முடக்கம்: காஸ் விலையை குறைக்க வேண்டும்: பெண்கள் வலியுறுத்தல்

தொண்டி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கு  கடும் சிரமத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. விலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வேலை வாய்ப்பு இல்லாமல் நடுத்தர மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின்  விலை நாளுக்கு நாள் உயர்ந்து ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்து விட்டது. இது அன்றாடம் வேலைக்கு செல்வோருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு விலையை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசியால் அடித்தட்டு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொது மக்களின் நலன் கருதி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து தொண்டியை சேர்ந்த பீர்முகம்மது கூறுகையில், தினமும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கூடுவதால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிக விலைக்கு பெட்ரோல் வாங்க வேண்டியுள்ளது. தற்போது சிலிண்டர் விலையும் ஏறி விட்டது. இது மேலும் சுமையை அதிகரிக்கும் விதமாக உள்ளது. ஒன்றிய அரசு அத்தியாவசிய தேவையான இவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.இல்லத்தரசி  மாலா கூறுகையில், ஒரே நேரத்தில் சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. கொரோனா காலத்தில் வேலையில்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் நேரத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அல்லல்படும் போது விலைவாசியும் மக்களை நசுக்குகிறது. சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார்….

The post கொரோனாவால் வாழ்வாதாரம் முடக்கம்: காஸ் விலையை குறைக்க வேண்டும்: பெண்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Corona ,Tondi ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...