×

100% கொரோனா தடுப்பூசி இலக்கு: பாரம்பரிய முறைப்படி கலெக்டருக்கு வரவேற்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், தகுதி வாய்ந்த 21 ஆயிரத்து 151 பழங்குடியினருக்கும் கடந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு முடிக்கப்பட்டது. இதன்மூலம், நாட்டிலேயே பழங்குடியின மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என்ற இலக்கு எட்டப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டியதற்காக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். இந்நிலையில், நேற்று ஊட்டி வந்த கலெக்டருக்கு தோடர், கோத்தர், இருளர், குரும்பர் பழங்குடியின மக்கள் சால்வை அணிவித்து, பாரம்பரிய இசை வாசித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்….

The post 100% கொரோனா தடுப்பூசி இலக்கு: பாரம்பரிய முறைப்படி கலெக்டருக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை