- சென்னை
- அருண்குமார் சேகரன்
- நதியா சோமு
- சுஜன்
- அம்ரிஷ்
- பிரதாப்
- கோகுல்
- Sundaravel
- ராஜ்குமார்
- கலைவாணி
- வினோத் குமார்
- சரவண தீபன்
- சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ்
- அம்மன் கலை படைப்புகள்
சென்னை: கதையின் நாயகனாக நடித்து ‘ப்ராமிஸ்’ படத்தை அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக புதுமுகம் நதியா சோமு நடித்துள்ளார். படத்தின் பிற கதை மாந்தர்களாக சுஜன், அம்ரிஷ் ,பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – வினோத்குமார். இசை – சரவண தீபன். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
படம் பற்றி இயக்குனர் அருண்குமார் சேகரன் பேசும்போது, ‘‘இந்த உலகில் ப்ராமிஸ் என்பது எவ்வளவு மதிப்புள்ளது என்பதைப் பற்றி இந்தப் படத்தில் பேசி இருக்கிறோம். கணவன் மனைவிக்குள் காதலர்களுக்குள் இருக்கும் ப்ராமிஸ் என்பது மிகவும் மதிப்புள்ளது என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்’’ என்றார். ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்கள்.
