பொங்கலுக்கு வருகிறார் நாய் சேகர்

காமெடி நடிகர் சதீஷ் நடித்துள்ள படம் நாய் சேகர். பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜீஷ் அசோக் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் லேப்ரடார் வகை நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. அந்த நாய்க்கு மிர்சி சிவா குரல் கொடுத்துள்ளார். நாயின் குணம் மனிதனுக்கும், மனிதனின் குணம் நாய்க்கும் இடம் மாறுவது மாதிரியான காமெடி கதை. இந்த தலைப்பு வடிவேலு ரீ எண்ட்ரி ஆகும் படத்துக்கு வைக்கப்பட்டது. இதற்கு இந்த படத்தின் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவே வடிவேலு படத்திற்கு நாய்சேகர் ரிட்டர்ன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories: