×

கோப்ரா படப்பிடிப்பு நிறைவு

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா.விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த படம் கொரோனா உள்ளிட்ட பிரச்சினகைளால் பல தடைகளை சந்தித்து தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இதன் படப்பிடிப்பு ரஷியாவில் நடந்தபோது கொரோனா முதல் அலை வீசியது. அப்போது ரஷ்யாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பியது படக்குழு.

அதன் பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் ரஷ்யா சென்று படப்பிடிப்பைப் படக்குழு நடத்தியது. அதன்பிறகு சென்னை திரும்பிய படக்குழு இறுதிகட்ட  காட்சிகளைப் படமாக்கி வந்தது.
தற்போது படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அதனை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் படங்களை அஜய் ஞானமுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

Tags : Cobra ,
× RELATED அஜித் கொடுத்த நம்பிக்கை: ஆதிக் ரவிச்சந்திரன்