ஆரி அர்ஜுனா ஜோடிய அஞ்சு குரியன்

ரெட்டைசுழி, நெடுஞ்சாலை, தரணி உள்பட பல படங்களில் நடித்த ஆரி தனது பெயரை ஆரி அர்ஜுனா என்று மாற்றிக் கொண்டு தற்போது நடித்து வருகிறார். பகவான், நெஞ்சுக்கு நீதி படங்களில் நடித்து வரும் அவர் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே தமிழில் சென்னை டூ சிங்கப்பூர், இக்ளு படங்களில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். இந்த படத்தை மணிவர்மன் இயக்குகிறார். தமன்குமார் இசை அமைக்கிறார். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.

Related Stories: