×

எச்.ராஜா மீது புகார் பாஜ நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் காரைக்குடி நகர தலைவர் சந்திரன், மாவட்ட தலைமைக்கு கடந்த 21ம் தேதி அளித்த ராஜினாமா கடிதத்தில், ‘எச்.ராஜா, தான் செய்த தவறுகளை மறைக்க தோல்விக்கு எங்கள்  மீது குற்றம் சாட்டுகிறார்’ என கூறி இருந்தார். அவரை தொடர்ந்து, மண்டல தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோரும் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் நேற்று, ‘காரைக்குடி மண்டல் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல் தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல் தலைவர் பிரபு ஆகியோர் கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்’ என அறிவித்துள்ளார்….

The post எச்.ராஜா மீது புகார் பாஜ நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : H.Raja ,Karaikudi ,BJP ,H. Raja ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி...