9 படங்களில் நடிக்கிறார் ஹன்சிகா

கடந்த ஆண்டு மந்தமான மார்கெட்டை கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. தமிழில் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை. நடித்து முடித்த மஹா படமும் முடங்கிக் கிடக்கிறது. ஒரு சில இசை ஆல்பங்களில் மட்டும் நடித்தார். ஆனால் இந்த ஆண்டு 9 படங்கள் வெளிவர இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஹன்சிகா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. குறிப்பாக, திரையுலகம் தாங்க முடியாத கடினமான சோதனைளை சந்தித்தது, ஆனால் இந்த 2022 புத்தாண்டின் போது அனைவரின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவது, இருட்டை விலக்கி தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல், பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தயாரிப்பு நிலையின் வேவ்வெறு கட்டத்தில் உள்ள எனது  9 வெவ்வேறு படங்கள் இந்த ஆண்டு வெளிவரும் என்பதை  உங்களுக்கு  அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு அனைவரின் கனவுகளும் இலக்குகளும் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வெற்றிகரமாகவும் இருங்கள், மேலும் நேர்மறை எண்ணத்தை  பரப்ப மறக்காதீர்கள், அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை. இவ்வாறு ஹன்சிகா தெரிவித்திருக்கிறார்.

Related Stories: