×

பெட்ரூம் காட்சியில் அமலா பால்

1980களில் பிரபலமாக இருந்த பாலிவுட் நடிகை பர்வீன் பாபி. பலமுறை காதல் தோல்வியை சந்தித்த நடிகை இவர். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் கூட இவரை காதலித்து ஏமாற்றியதாக நிறைய தகவல்கள் வெளிவந்தன. பர்வீன் பாபியுடன் நெருக்கமாக பழகியவர் டைரக்டர் மகேஷ் பட். இதனால் பர்வீனின் கதையை அவர் வெப்சீரிஸாக உருவாக்கிவிட்டார். ரஞ்சிஷ் ஹி சஹி என்ற பெயரில் இந்தியில் இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. இதில் பர்வீன் பாபி கேரக்டரில் நடித்திருப்பது நம்ம ஊர் அமலா பால்தான்.

பாலிவுட்டுக்கு நடிக்க சென்ற அமலா பால், முதலில் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் படங்களிலும் நடிக்க இருக்கிறாராம்.  இந்த வெப்சீரிஸின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் படுக்கையறை காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார் அமலா பால். ‘இந்த வெப்சீரிஸின் கதைக்கு தேவையாக இருந்ததால் அதுபோல் நடித்துள்ளேன். பர்வீன் பாபியின் வாழ்க்கையின் மறுபக்கம் கண்ணீர் நிறைந்தது. அதை இதில் பார்க்கலாம்’ என அமலா பால் கூறுகிறார்.

Tags : Amala Paul ,
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தால் பணிநீக்கம் செய்யக்கூடாது: ஏ.ஆர்.ரஹ்மான்