ஆந்திராவில் அரசாங்கத்தால் மட்டுமே திரைப்பட டிக்கெட்டுகளை விற்க முடியும்: அம்மாநில அரசு அறிவிப்பு

ஆந்திர அரசு புதிய திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. . இதற்கான பேரவை ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இனி அரசு சார்புடைய சமூக வலை தளங்களில் ஆன்லைனில் குறிப்பிட்ட திரைப்படங்களுக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். இதனால், ஒரு நாளைக்கு 4 காட்சிகள் கண்டிப்பாக திரையிட வேண்டும்.

மேலும், கொரோனா பரவல் இருக்கும் இந்த கால கட்டத்தில் மக்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அரசு குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறலாம். இதன் காரணமாக திரையரங்குகள் முன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாது. அதிக காட்சிகளை ஓட்டி, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ய இயலாது என திரைத்துறை தொடர்பான அமைச்சர் நானி கூறுகிறார்.

ஆனால், தெலுங்கு திரைப் படங்கள் தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களில் திரையிடப் படுகின்றன. இரு மாநிலங்களிலும் வேறு வேறு முறைகள் பின்பற்றுவது தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே, இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜிஎஸ்டி நாடு முழுவதும் ஒரே மாதிரி இருப்பதை போன்று, நாடு முழுவதும் திரைப்பட டிக்கெட்டுகளின் விலையும் ஒரே மாதிரி இருத்தல் அவசியம் என்று  ஆந்திர அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: