×

ஆல்பத்திற்கு ஆடிய மஹிமா நம்பியார்

சாட்டை படத்தில் அறிமுகமான மஹிமா நம்பியார், அதன் பிறகு என்னமோ நடக்குது, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், மகாமுனி, அசுரகுரு உள்பட பல படங்களில் நடித்தார். இவர் நடித்து முடித்துள்ள ஐங்கரன் படம் வெளிவர வேண்டியது இருக்கிறது.

இந்த நிலையில் ஆல்பம் ஒன்றில் ஆடியிருக்கிறார் மஹிமா. குண்டுமல்லி என்கிற அந்த ஆல்பத்தை எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரித்துள்ளனர், ஆதவ் கண்ணதாசன் இயக்கி உள்ளார். இந்த ஆல்பம் தமிழ், மற்றும் மலையாளத்தில் வெளியாகி உள்ளது.
 
திருமண நிச்சயதார்த்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட காதல் மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த பாடலாக இது உருவாகியுள்ளது. ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்து, நித்யஸ்ரீயுடன் இணைந்து தமிழ் பதிப்பை பாடியுள்ளார்.கே எஸ். ஹரிஷங்கர் மற்றும் நித்யஸ்ரீ குண்டுமல்லி பாடலின் மலையாள பதிப்பை பாடியுள்ளனர். குண்டுமல்லி பாடலுக்கான தமிழ் வரிகளை விவேக் ரவியும், மலையாள வரிகளை ரஃபீக்கும் எழுதியுள்ளனர்.

Tags : Mahima Nambiar ,
× RELATED அக்டோபர் 6ல் 10 படங்கள் ரிலீஸ்