×

‘வலிமை வருது’ சிலிர்க்கிறார் சிவகார்த்திகேயன்

சென்னையில் நடந்த ஆர்ஆர்ஆர் பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது: நான் ராஜமவுலி சாரோட மிகப்பெரிய ரசிகன். மகதீரா படம் பார்த்ததிலிருந்து, அவருடைய பெரிய ஃபேன் ஆக மாறிட்டேன். அதன் பிறகு ‘நான் ஈ’ படம் பார்த்தேன். ஒரு ஈ-யை வைத்துக்கொண்டு ஒரு சூப்பர் ஹிட் படம் எடுக்க முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன். அப்பொழுதுதான் நான் சினிமா இண்டஸ்ட்ரியில் நுழைந்த நேரம். ஈ-யை வைத்தெல்லாம் ஒரு படம் ஹிட் கொடுக்கிறார்கள் கண்டிப்பாக நம்மையும் சினிமா உலகம் ஏற்றுக்கொள்ளும் என்று அப்பொழுதுதான் எனக்கு தைரியம் வந்தது.

ஒரு படம் ஹிட் கொடுத்தாலே, கெத்தாக பேசும் பலருக்கு மத்தியில், ராஜமவுலி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து விட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க தொடங்கிவிடுகிறார். அது ஒரு பெரிய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக உள்ளது. சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தங்களுடைய நிஜ வாழ்க்கையிலும் ஜெயிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

ஆர் ஆர் ஆர் படம் கண்டிப்பாக ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைக்கும் படமாக இருக்க போகிறது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கப் போகின்றது அதுமட்டுமில்லாமல், அஜித்தின் வலிமையும் வரப்போகிறது. இந்த படத்தை எல்லாம் மக்கள் திரையரங்கில் வந்து பார்த்தால், அதன் பிறகு படம் பார்க்க வரும் மக்கள் கண்டிப்பாக எங்கள் படங்களையும் ஏற்றுக்கொள்வார்கள்.

Tags : Sivakarthikeyan ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்