×

பாலியல் விழிப்புணர்வு கிடைக்குமாம்… மகன்களுடன் ‘செக்ஸ்’படம் பார்க்கும் ‘பாப் சிங்கர்’

ஜகார்த்தா: பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது டீன்ஏஜ் மகன்களுடன் செக்ஸ் படங்களை பார்ப்பதாக, இந்தோனேசியாவை சேர்ந்த பாப் இசை நட்சத்திரம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்றைய இணைய உலகில் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக இணைய, சமூக வலைதளங்களில் வரும் ஆபாச காட்சிகளும், வீடியோக்களும், படங்களுமே காரணமாக இருக்கின்றன. அதனால், பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வளர்த்து வருகின்றனர். குறிப்பாக ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க, அது தொடர்பான இணைய முகவரிகளை ‘பிளாக்’ செய்தும் வைத்துள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த பாப் இசை நட்சத்திரமான யுனி சாரா (47) என்பவர், தனது இரண்டு ‘டீன்ஏஜ்’ மகன்களுடன் சேர்ந்து செக்ஸ் படங்களை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து செக்ஸ் படங்களையும், வீடியோக்களையும் பார்ப்பேன். இதுகுறித்து பல இடங்களில் பேசியுள்ளேன். சிறுவர்களாக இருக்கும் போது, அவர்களுக்கு செக்ஸ் குறித்த கல்வியை அளிப்பதால், அவர்கள் பாலியல் வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதலை அறிய முடியும். இதனை கற்றுக் கொடுப்பது பெற்றோரின் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். எது நல்லது… எது கெட்டது என்பதற்கான வித்தியாசம் தெரியாததால்தான், அவர்கள் மோசமான பாதைகளுக்கு செல்கின்றனர். அதனால், என் மகன்களுக்கு அதனை சொல்லித்தர வேண்டும் என்று விரும்பினேன். தற்போதைய ‘ஸ்மார்ட்போன்’ யுகத்தில், எத்தனையோ பேர் செக்ஸ் குறித்த புரிதல் இல்லாமல் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். திருட்டுத்தனமாக தங்கள் குழந்தைகள் செக்ஸ் படங்கள் பார்ப்பதை பல பெற்றோர்களே நேரில் பார்க்கின்றனர். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால்தான் அதைப் பற்றி என் மகன்களுக்கு கற்பிக்க விரும்பினேன். காதல் என்ற மோசடியில் சிக்குவதை காட்டிலும், அவர்கள் திறந்த மனதுடையவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றார். இவரது இந்த பேட்டி, சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பலர் ஆதரித்தும், சிலர் கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். …

The post பாலியல் விழிப்புணர்வு கிடைக்குமாம்… மகன்களுடன் ‘செக்ஸ்’படம் பார்க்கும் ‘பாப் சிங்கர்’ appeared first on Dinakaran.

Tags : Bob Singer ,Jakarta ,
× RELATED இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்