×

இலை கட்சியின் மாஜி அமைச்சர் கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்க கரன்சி கரைவதை பார்த்து கண்கலங்குவதை சொல்கிறார் wiki யானந்தா

‘‘தேனிக்காரர் தன்னை முன்னிறுத்துவதில் காட்டும் வேகத்தை கட்சியை வளர்ப்பதிலோ, மக்கள் பிரச்னையிலோ காட்டவில்லையாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஹனிபீ  மாவட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் என  பெரும்பாலானவர்கள் சேலம்காரருக்கு ஆதரவாக இருக்காங்க. ஆனாலும் நான்  தான் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் என் பின்னால்தான் தொண்டர்கள் உள்ளனர் என ேதனிகாரர் போகும் இடங்களில் எல்லாம் சொல்லி வருகிறாராம். குறிப்பாக, தென் மாவட்டத்தில்  தனக்குத்தான் செல்வாக்கு இருப்பதாக தன் அடிபொடிகளிடம் கூறினாராம். அதற்கு பிறகு அடிபொடிகள், சேலத்துக்காரர் தொடர்ந்து 3 போராட்டங்கள்,  பொதுக்கூட்டங்கள் அறிவிச்சு நடத்தி முடிச்சிட்டாரு. தேனி மாவட்டத்தின் பல பகுதியிலும், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்ததாம். இதுல என்ன கொடுமைன்னா, அவரின் சொந்த ஊரான பிக்  பாண்ட்லயும் பெருவாரியான ஆட்களை திரட்டி சேலத்துக்காரர் தரப்பு போராட்டத்தை  நடத்தினாங்க. ஆனா இப்ப வரைக்கும் தேனிகாரர்  தரப்பிலிருந்து பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தல. இந்த லட்சணத்துல இவரை நம்பி நாம இருக்கோம். நம்ம நிலை என்ன ஆகுமோ. கட்சியை வளர்க்கவில்லை. மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. ஆக மொத்தத்துல நம் தேனிகாரர் தனக்கு தானே குழிவெட்டிக் கொண்டிருக்கிறார் என்று அடிபொடிகள் பேசிக் கொண்டனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ராமநாதபுரத்தில் நடக்கும் தாமரையின் கோஷ்டிபூசல் உச்சகட்டத்தை எட்டியிருக்காமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் மரியாதை வார்த்தையில் துவங்கும் தொகுதியின் தாமரைக் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனராம். இதுக்கு கோஷ்டிபூசல் தான் முக்கிய காரணமாம். இதனை கருத்தில் கொண்டு ‘வடமாநில நதி பெயரில் முடியும்’ மாவட்டத்தின் ‘குடி’யில் முடியும் ஊர்க்காரரான மாநில அளவில் முக்கியப் பதவியில் இருக்கிற ‘இரட்டை இன்சியல்’ கொண்டவர், மரியாதை தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். கட்சியில் தொடர்ந்து உழைத்து, கிளை கழகம் அமைத்து பணியாற்றி வருபவர்கள் பலர் இருக்கும்போது, வெளியில் இருந்து வரும் நபரை தொகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது. வரும் காலத்தில் எம்எல்ஏ சீட் போன்றவை இவருக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுவது, இப்பகுதி தாமரைக்கட்சியினரை கடும் அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளதாம். தொகுதியில் உள்ளவர்களுக்கே பதவிகளும், சீட்களும் தர வேண்டும். திடீரென வருபவர்களை முன்னிலைப்படுத்துவதை ஒரு போதும் ஏற்க முடியாது என தாமரைக் கட்சியினர் போர்க்கொடி தூக்கி இருப்பதுடன், மாநில தலைமைக்கு கடிதங்களையும் குவித்து வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆர்ப்பாட்டத்தில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வலுவான தலைமை இலை கட்சியில் அணியை அமையும் அழுது கொண்டே கரன்சியை கரைத்து வரும் மாஜி அமைச்சர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மனுநீதி  சோழன் மாவட்ட இலை கட்சி மாஜி அமைச்சர் ேசலத்துக்காரர் அணியில்  ‘பெயரளவுக்கு’ தான் இருந்து வருகிறார். மாவட்டத்தில் இலை கட்சியின்  சார்பில்  மாஜி அமைச்சர் தலைமையில் நடக்க கூடிய நிகழ்ச்சிகளில் கூட்டத்தை  காட்டுவதற்காக  அவரே ‘விட்டமின் ப’ கொடுக்கும் நிலை தற்போது இருந்து  வருகிறதாம். இதனால் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த கூட  மாஜி அமைச்சருக்கு விருப்பமில்லையாம். உறுதியான தலைமை இருக்கும் தெரியும் வரை ஏதாவது ஒரு அணியில் இருக்க வேண்டுமே என்பதற்காக சேலத்தார் அணியில் இருக்கிறாராம். எனவே, ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு தானாக கூட்டம் சேராது.  இதனால்  ‘கரன்சியை’ கொடுத்தாவது கூட்டத்தை கூட்டி விடலாம் என்ற நிலைக்கு மாஜி  அமைச்சர் முன்வந்துள்ளாராம். அந்த அளவுக்கு பெரிய கூட்டத்தை கூட்ட கூட மாஜி அமைச்சர் படாத பாடு பட்டு வருகிறராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தமிழக பொதுப்பணித்துறையில் என்ன நடக்குது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘பொதுப்பணித்துறை  மற்றும் நீர்வளத்துறையில் சட்டத்திற்கும், விதிகளுக்கும் புறம்பாக  இளநிலைப் பொறியாளர் காலிப்பணியிடங்களில் உதவிப்பொறியாளர்களைக் கொண்டு   பணியிடங்களை நிரப்பும்  நடவடிக்கையில் மூத்த அதிகாரிகளில் ஒரு குழுவினர் தீவிரமாக உள்ளார்களாம். பொதுப்பணித்துறை அமைச்சருக்கு இந்த மூத்த அதிகாரிகள் தவறான தகவல் கொடுத்துள்ளதாக சொல்றாங்க. விதிகளுக்கு புறம்பாக இளநிலைப் பொறியாளர் காலிப்  பணியிடங்களில் உதவிப் பொறியாளர்களை நியமிக்க தடை செய்ய வேண்டும் என  பொறியாளர் சங்கத்தினர் கோரிக்கை வைக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சஸ்பெண்ட் நடவடிக்கையால் கதிகலங்கிய அலுவலர்கள் குறித்து சொல்லேன் கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தீப  மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 860 ஊராட்சிகளில் உள்ள  வீடுகள்ல மழைநீர் சேமிக்க தனிநபர் உறிஞ்சு குழி கட்டப்பட்டு வருது. இதுல  தாமாக முன்வந்து ஆர்வம் காட்டுபவர்கள் வீடுகள்ல ₹11,200 அரசு நிதியில்  மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு, 100 நாள் வேலை திட்டம் மூலம் கட்டி  தரப்படுது. ஆனா பல ஊராட்சிகள்ல மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு கட்டாமலேயே போலி கணக்கு காட்டி முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.அதற்கேற்ப  கலசமான ஒன்றியத்துல மாவட்ட அதிகாரி சில நாட்களுக்கு முன் ஆய்வு செஞ்சாரு.  அப்போ முறைகேட்டுல ஈடுபட்டதா 3 பேரை சஸ்பெண்ட் செஞ்சுட்டாரு. இதேபோல தீப  மாவட்டத்துல இருக்குற அனைத்து ஊராட்சியிலயும் ஆய்வு செஞ்சா பலர்  சிக்குவாங்கன்னு குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்கு. இதுனால மாவட்ட அதிகாரி  அடுத்து எந்த ஊராட்சியில ஆய்வுக்கு செல்வாரோன்னு சம்பந்தப்பட்ட துறையை  சேர்ந்த அலுவலர்கள் பலர் கதிகலங்கி போய் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post இலை கட்சியின் மாஜி அமைச்சர் கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்க கரன்சி கரைவதை பார்த்து கண்கலங்குவதை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : maji minister of the leaf ,party ,kransi ,Peter Mama ,Honebee ,Maji Minister of the ,Leaf Party ,Karansi ,
× RELATED தேர்தலில் வென்ற தெலுங்கு தேசம்...