×

ராயபுரத்தில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

தண்டையார்பேட்டை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா ராயபுரம் அறிவகம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, அரசு மகப்பேறு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாந்தி, அங்கன்வாடி பணியாளர்கள் என ஏராளமானவர் பங்கேற்றனர். கர்ப்பிணிகளுக்கு தேங்காய், பழம், வளையல், வெற்றிலை பாக்கு, பாதாம், முந்திரி, ஏழு வகை சாதம் உள்பட 21 சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, கர்ப்பிணிகளுக்கு பன்னீர் தெளித்து நலங்கு வைத்து வரிசை தட்டு பொருட்களை வழங்கினார். புடவை, பாதாம், முந்திரி, வளையல், மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகள் 150 கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ பேசுகையில், ‘‘தமிழகம் முழுதும் 234 தொகுதியிலும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற முதல்வரின் ஆணைக்கிணங்க தற்போது ராயபுரத்தில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது. ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை சிறப்பாக உள்ளது. இந்த மருத்துவமனை 550 படுக்கைகளில் இருந்து 650 படுக்கைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 10 ஐசியு படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 60 இன்குபேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்கள் தமிழக அரசு சார்பில் ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனைக்கு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் தனியார் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனை உள்ளதால் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 6 மாதங்களில் இரண்டு பெண்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் பராமரித்து அனுப்பி வைத்தோம். இப்படி மருத்துவமனைக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வந்து ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுகிறது. ராயபுரத்தை பொறுத்தவரை ராயல் புறமாக மாற்றுவது லட்சியம் என்றார். நிகழ்ச்சியில் ராயபுரம் பகுதி திமுக செயலாளர் வ.பே.சுரேஷ், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், காங்கிரஸ் வேளாங்கண்ணி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ அருணா உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்….

The post ராயபுரத்தில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Rayapuram ,Social Baby Showers Festival ,Social Welfare and Women's Rights ,
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...