இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு ஒமிக்ரான்

சென்னை: தமிழ் பட இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இப்போது ஷாட் புட் 3 என்ற குழந்தைகளுக்கான படத்தை இயக்கி வருகிறார். இவர் அமெரிக்காவில் வசிக்கிறார். சில நாட்களுக்கு முன் கடும் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அருண் வைத்தியநாதன் சமூக வலைத்தளத்தில் கூறும்போது, ‘எனது வீட்டுக்கு புது விருந்தாளி வந்திருக்கிறார். அவரது பெயர் ஒமிக்ரான். கவனமாக இருக்க வேண்டும் நண்பர்களே. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: