×

தமிழ் பெண்ணாக மாறிய ஜான்வி

தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தமிழ் பெண்ணாக மாறிவிடுகிறார் ஜான்வி கபூர். ‘அம்மா தேவி வெளியிடங்களில் மாடர்ன் உடை அணிந்தாலும் சொந்த மண்ணான தமிழகத்துக்கு வரும்போது புடவைக்கு மாறிவிடுவார். இதை சிறுவயதிலிருந்து நான் பார்த்திருக்கிறேன். அதனால் தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் எந்த இடத்துக்கு போனாலும் அந்த கலாசாரத்துக்கு நான் மாறிவிடுகிறேன். இதை அம்மாவிடம்தான் நான் கற்றேன்’ என்கிறார் ஜான்வி.

சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு பாவாடை தாவணியில் அவர் வந்திருந்தார். அது பற்றித்தான் இப்படி ஜான்வி கூறியிருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை அவர் முடித்துவிட்டார். இதையடுத்துதான் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். பாலிவுட்டில் 3 படங்களில் நடிக்கும் ஜான்வி, தென்னிந்திய சினிமாவில் தனக்கு பிடித்த கதை, கேரக்டர் அமைந்தால் நடிப்பேன் என்கிறார்.

Tags : Janvi ,
× RELATED பஞ்சாபில் விவசாயிகள் முற்றுகையால்...