×

ஆந்திர மாநிலத்தில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழகம் வருகை

சென்னை: ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டுக்கு 330 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்துக்கு மொத்தம் 15 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். கடந்த மே மாதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் ஜூலை வரை 2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. பின்னர் தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் போதிய அளவு நீர் இருப்பதால் கடந்த மாதம் 15 தேதி திடீரென கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர விவசாயிகளுக்காக 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த மாதம் 21ம் தேதி  ஊத்துக்கோட்டை அருகே தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டில் 148 கன அடியாக பூண்டி ஏரிக்கு சென்றது. மேலும் அதன் பிறகு கடந்த 29 தேதி கண்டலேறுவில் இருந்து ஆந்திர விவசாயிகளுக்கும், சென்னை குடிநீர் தேவைக்காகவும், கூடுதலாக வினாடிக்கு 2,020 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆந்திர விவசாயிகளுக்குபோக மீதமுள்ள தண்ணீர் சென்னை மக்களின் குடிநீருக்காகவும் தற்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டுக்கு 330 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. …

The post ஆந்திர மாநிலத்தில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழகம் வருகை appeared first on Dinakaran.

Tags : Krishna ,Andhra ,Tamil Nadu ,Chennai ,Kandaleru dam ,Andhra state ,
× RELATED ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10...