×

கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக புகார் சிறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி மனு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கர் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கடலூர் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தபோது அதே சிறையில் ஒன்பது கைதிகள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது குறித்து உள்துறை செயலாளரிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால்  தனது மனுவை பரிசீலிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டுமென  கோரியிருந்தார்.  இந்த மனு நேற்று நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, பாதிக்கப்பட்ட நபர்களால் அல்லாமல் மூன்றாம் நபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக் குழுவும் சமந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளும் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என கேள்வி எழுப்பியதுடன் இந்த மனு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்….

The post கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக புகார் சிறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி மனு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Court ,Chennai ,Shankar ,Chennai High Court ,Cuddalore Jail ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...