×

சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்த முருகன் சிலை மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஒரு சமுதாயத்துக்குட்பட்ட சங்க கட்டிடம், திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்திற்கு கீழ் வருவதால் அறநிலையத்துறை சார்பில் சீல் வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்திற்குள் முருகன் சிலை இருப்பதால் வழிபட வசதியாக கட்டிடத்தை திறக்க கோரி சங்க நிர்வாகி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு அறநிலைய துறை எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தது. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டிடத்தை திறக்க அனுமதிக்க முடியாது. சிலையை அறநிலையத்துறை மீட்டெடுத்து உடனடியாக நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்க செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  சுமார் ஒன்றரை அடி உயர முருகன் கற்சிலையை அறநிலையத்துறை எடுத்து நாகர்கோவில் நாகராஜா கோயில் வளாகத்தில் உள்ள விக்கிரகங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்றது. இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதுபற்றிய விவரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். …

The post சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்த முருகன் சிலை மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Murugan ,Nagercoil ,Parvathipuram ,Tiruchendur Temple ,Charity Department ,
× RELATED வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று...