×

ரஜினி அறக்கட்டளை சார்பில் இணையதளம் துவக்கம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவிக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் முற்போக்கான சிந்தனை, நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது. எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும் ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். http://rajinikanthfoundation.org/ என்ற இணையதளத்தை இதற்காக தொடங்கியுள்ளோம்.

Tags : Rajini Foundation ,
× RELATED ரஜினி அறக்கட்டளை சார்பில் இணையதளம் துவக்கம்