×

மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவிப்பு திமுக மாணவர் அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் நேர்காணல்

சென்னை: திமுக மாணவர் அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களிடம் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் நேர்காணல் நடத்தி நியமிக்கப்படுவார்கள் என்று மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட, பாகம் வரையிலான நிர்வாக கட்டமைப்பு கீழ்காணும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட அமைப்பு: ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். அதில், பெண் துணை அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்லூரி அல்லது பட்டய படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல அனைத்து துணை அமைப்பாளர் பதவிகள் பெண்கள் நியமிக்க வேண்டும்.இது அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும்.மாநகர அமைப்பு: ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 35க்குள் இருக்க வேண்டும். நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் அமைப்பு: ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர்.  பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது தற்போது கல்லூரியில் பயிலுக்கூடிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வட்ட, பாக அமைப்பு: ஒரு அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது தற்போது கல்லூரியில் பயிலுக்கூடிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மாவட்ட, மாநகர மாணவர் அணி பொறுப்பிற்கு விண்ணப்பித்தவர்களிடம், அந்தந்த மாவட்ட செயலாளர் முன்னிலையில், மாணவர் அணிச் செயலாளர் மற்றும் மாநில மாணவர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி, அமைப்பாளர, துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அளவிலான மாணவர் அணி பொறுப்பிற்கு விண்ணப்பித்தவர்களிடம், அந்தந்த மாவட்ட செயலாளர் முன்னிலையில், மண்டல பொறுப்பேற்கும் மாநில நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி, அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். திமுகவில் உள்ள 72 மாவட்டங்களும் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, திமுக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்பவர்கள் இதுவரையில் திமுகவுக்கு பணியாற்றியிருக்கக்கூடிய விவரத்தை இணைத்து, வரும் 17ம்தேதிக்குள் மாவட்ட செயலாளரிடம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவிப்பு திமுக மாணவர் அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் நேர்காணல் appeared first on Dinakaran.

Tags : C. ,MM ,Velarasan ,Djagagam Student Team ,Chennai ,Dizhagam ,Kazhagam ,Team ,Dinakaran ,
× RELATED முலாம் பழத்தின் நன்மைகள்!