×

13 மாவட்ட வணிகர்களுக்கு ஜிஎஸ்டிஆர்-1 படிவத்துக்கான தாமத கட்டணம் கிடையாது: வணிக வரி ஆணையர் தகவல்

சென்னை: 13 வணிக வரி ஆணையர் தீரஜ் குமார் வெளியிட்ட அறிக்கை: மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்குதலில் இருந்து மீட்பதற்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டிச.11ம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டிய, 2022 நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி.ஆர்-1 படிவத்தினை தாக்கல் செய்ய இயலாத, புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள வணிகர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புயலினால் பாதிக்கப்பட்டுள்ள 13 வருவாய் மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் முதன்மை வணிக இடங்களை கொண்டுள்ள வணிகர்கள், டிச.13ம் தேதி வரை நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி.ஆர்-1 படிவத்தினை தாக்கல் செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே வருவாய் மாவட்டங்களில் உள்ள வணிகர்கள் நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி.ஆர்-1 படிவத்தினை டிச.13ம் தேதி வரை தாக்கல் செய்வதற்கு தாமத கட்டணம் விதிக்கப்படமாட்டாது. மேலும், ஜி.எஸ்.டி.ஆர்-1 -ல் பதியப்படும் வழங்குகைகளின் மூலம் ஜி.எஸ்.டி.ஆர்-2 ஏ படிவத்தில் இடம்பெறும் உள்ளீட்டு வரியினை துய்க்க கொள்முதல் செய்பவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்….

The post 13 மாவட்ட வணிகர்களுக்கு ஜிஎஸ்டிஆர்-1 படிவத்துக்கான தாமத கட்டணம் கிடையாது: வணிக வரி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Commercial Tax Commissioner ,Dheeraj Kumar ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...