தனுஷ் நடித்த அத்ரங்கி ரே படத்தில் ஏ. ஆர். ரகுமானுக்கு கௌரவம்: இசை புயல் பெருமிதம்

நடிகர் தனுஷ் இந்தியில் மீண்டும் நடித்துள்ள படம் அத்ரங்கி ரே. இந்த படத்தின் தமிழ் வெளியீட்டிற்கு கலாட்டா கல்யாணம் என பெயரிடப்பட்டுள்ளது. அத்ரங்கி ரே’ படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் சென்ற டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் கிறிஸ்மஸ் பாண்டிகையை முன்னிட்டு வெளியானது‌.

நடிகை சாரா அலிகான், நடிகர் அக்ஷய் குமார் தனுஷடன் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் முடிந்த பின்னர் வழக்கம் போல a film by என இயக்குனரின் பெயர் இடம் பெறும். அது தான் உலக சினிமாக்களில் வாடிக்கையான நிகழ்வு. ஆனால் இந்த கலாட்டா கல்யாணம் எனும் Atrangi Re படத்தில் a film by என இசைப்புயல் A. R. Rahman அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவில் அரிய நிகழ்வான இதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து ரசிகர் ஒருவர்  A R ரகுமானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்னூட்டம் செய்து கேள்வி எழுப்பினார். அதில் அத்ரங்கி ரே படத்தை பார்த்து பரவசம் அடைந்ததாகவும், படத்தின் இசை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் கூறியுள்ளார். அதிலும் படம் முடிந்த பிறகு A Filim By A R Rahman என்று போட்டது இதயம் கனிந்த செயல் என்றும் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் இந்திய சினிமாவில் இன்னும் பல ஆனந்த் ராய்க்கள் வேண்டும் என்றும் இசையமைப்பாளர்கள் மீது ஆனந்த் ராய் வைக்கும் நம்பிக்கையும் மரியாதையும் நம் வேலையை இன்னும் மெனக்கெட்டு செய்ய தூண்டுகோலாக அமையும் என்று கூறியுள்ளார்.

Related Stories: