தெலுங்கு கற்கும் பிரியா பவானி சங்கர்

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார், பிரியா பவானி சங்கர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தமிழில் பல படங்களில் நடித்துள்ள நான், தற்போது தெலுங்கில் நடித்து வருகிறேன். தமிழில் நான் அறிமுகமான படத்தை விட, தெலுங்கில் நடிக்கும் படத்துக்கு அதிக சம்பளம் வாங்கியுள்ளேன். ஆனால், தமிழில் நடிப்பதுதான் சுலபமாக இருக்கிறது. தமிழ் சொந்த மொழி என்பதால் இப்படி தோன்றலாம்.

ஆனால், நடிப்புக்கு மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதால், தெலுங்கில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். அதற்காக தெலுங்கு பேச கற்றுக்கொள்கிறேன். தற்போது தமிழில் ‘ஹாஸ்டல்’, தனுஷுடன் ‘திருச்சிற்றம்பலம்’,  சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக்குடன் ‘பத்து தல’, கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’, அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’, அருண் விஜய்யுடன் ‘யானை’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, ராகவா லாரன்சுடன் ‘ருத்ரன்’ ஆகிய படங்கள் இருக்கிறது. விஷால், ஜெயம் ரவி நடிக்கும் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளேன்’ என்றார்.

Related Stories: