×

பிரபாஸ் பட பூஜையில் சிரஞ்சீவி

ஐதராபாத்: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா படம், ‘ஸ்பிரிட்’. இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியாமல் இருந்தது. காரணம், தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’, ‘ஃபௌசி’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது. தற்போது ‘ஸ்பிரிட்’ என்ற படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர். இதில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்தியில் வெளியான ‘அனிமல்’ என்ற படத்துக்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக ‘அனிமல்’ திரிப்தி டிம்ரி நடிக்கிறார். ஒரேகட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் விவேக் ஓபராய், பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். டி-சிரீஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

Tags : Chiranjeevi ,Hyderabad ,Prabhas ,Sandeep Reddy Vanga ,Prabhas' ,Sandeep Reddy ,
× RELATED ‘வணங்கான்’ பாதிப்பில் சிக்கிய அருண் விஜய்