×

கதி சக்தி பன்னோக்கு சரக்கு முனையத்தால் இந்திய இரயில்வேக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும்?.. வைகோ கேள்விக்கு இரயில்வே அமைச்சர் பதில்

டெல்லி: கதி சக்தி பன்னோக்கு சரக்கு முனையத்தால் இந்திய இரயில்வேக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும்? பணியாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? என்பது குறித்து நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ எம்.பி., 09.12.2022 அன்று எழுப்பிய கேள்விகளுக்கு இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளர். நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ கேள்வி: கதி சக்தி பன்னோக்கு சரக்கு முனையம் (GCT) தொடங்கப்பட்ட பிறகு, புதிய சரக்கு முனையங்களுக்கான தொழில்துறையிலிருந்து ஏதேனும் முன்மொழிவுகள் பெறப்பட்டதா?அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்: ஆம், .வைகோ கேள்வி: அப்படியானால், எத்தனை புதிய சரக்கு முனையங்கள் முன்மொழியப்பட்டுள்ளன? எத்தனை விண்ணப்பங்கள் மற்றும் உறுதியான முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன?அமைச்சர் பதில்: கதி சக்தி பன்னோக்கு சரக்கு முனையம் (GCT) கொள்கையின் கீழ், 2022-23, 2023-24 & 2024-25 ஆகிய மூன்று ஆண்டுகளில் 100 GCTகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 22 GCT. ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. முனையம் மேம்படுத்துவதற்காக 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 79 கொள்கை ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.வைகோ கேள்வி: அதற்கான பணியாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? அதற்கு ஏதேனும் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதா?அமைச்சர் பதில்: இரயில்வே அல்லாத நிலத்தில் பன்னோக்கு சரக்கு முனையங்கள் உருவாக்கப்படுவதற்கு, ஆபரேட்டர்களைக் கண்டறிந்து, தேவையான ஒப்புதலைப் பெற்ற பிறகு முனையத்தை நிர்மாணிப்பார்கள். ரயில்வே நிலத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ழுஊகூகள் உருவாக்கப்படுவதற்கு, நிலப் பகுதிகள் ரயில்வேயால் அடையாளம் காணப்படும். மேலும் முனையத்தின் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டிற்கான ஜிசிடி ஆபரேட்டர் திறந்த ஒப்பந்தமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.வைகோ கேள்வி: புதிய சரக்கு முனையங்களை இயக்குவதன் விளைவாக ரயில்வேயால் எதிர்பார்க்கப்படும் வருவாய் எவ்வளவு?.. நேரடியாக வேலை வாய்ப்பு அளிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை யாது?அமைச்சர் பதில்: GCTளின் செயல்பாட்டிற்குப் பிறகு வருவாய் மற்றும் வேலைவாய்ப்பின் எந்த மதிப்பீடு பற்றிய தரவு பராமரிக்கப்படுவதில்லை.இவ்வாறு ஒன்றிய அமைச்சர் பதிலளித்தார்….

The post கதி சக்தி பன்னோக்கு சரக்கு முனையத்தால் இந்திய இரயில்வேக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும்?.. வைகோ கேள்விக்கு இரயில்வே அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Indian Railways ,Kathi Shakti Pannoku Cargo Terminal ,Minister ,Vaiko ,Delhi ,Kathi Shakti Pannoku Freight Terminal ,Railway ,
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்