குறுக்குவழியில் சாக்‌ஷி அகர்வால்

வல்லதேசம் படத்தை தொடர்ந்து என்.டி.நந்தா இயக்கும் படம், ‘குறுக்குவழி’. துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்‌ஷி அகர்வால், ஷிரா கார்க், மிப்பு நடிக்கின்றனர். கே.சிங், ஏ.சர்மா தயாரிக்கின்றனர். படம் குறித்து என்.டி.நந்தா கூறுகையில், ‘தற்போது நான் ‘120 ஹவர்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்குகிறேன்.

அடுத்த ஆண்டு வெளியாகும் இப்படத்துக்கு முன்பு கிடைத்த இடைவெளியில் ‘குறுக்குவழி’ படத்தை இயக்கி வருகிறேன். தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு இணையாக தொழில்நுட்பம் மற்றும் கதை அம்சத்துடன் உருவாக்க வேண்டும்’ என்றார். தமிழில் ‘பஹீரா’, ‘நான் கடவுள் இல்லை’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘தி நைட்’, ‘புரவி’, ஆங்கிலத்தில் ‘120 ஹவர்ஸ்’ ஆகிய படங்களில் சாக்‌ஷி அகர்வால் நடித்து வருகிறார்.

Related Stories: