×

பட்டிவீரன்பட்டி அருகே 40 ஆண்டுக்குப்பின் நிரம்பிய குளம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் மந்தைகுளம் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பியது. பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தின் மையப்பகுதியில் மந்தைகுளம் உள்ளது. இந்த குளம் 3 ஏக்கர் 89 செண்ட் பரப்பளவு கொண்டதாகும். இந்த குளம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான குளமாகும். இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நீர்வழிப்பாதைகள் அடைக்கப்பட்டதாலும், குளத்திற்கு தண்ணீர் வரும் மருதாநதி வடக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாத காரணத்தினால் இந்த மந்தைகுளம் நிரம்பாமல் இருந்து வந்தது.இந்நிலையில், வடக்கு வாய்க்கால் தூர்வாரப்பட்டது. இதனால் மருதாநதி வடக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மருதாநதி வடக்கு வாய்க்காலில் வந்த தண்ணீர் காரணமாக சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்பு மந்தைகுளம் நிரம்பியுள்ளது. இதனால் ஊர்பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஊர்பொதுமக்கள் கூறுகையில்:மந்தைகுளம் 40 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பியுள்ளது. முன்பு தண்ணீர் இல்லாத போது இந்த குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டது. தற்போது குளத்திற்கு தண்ணீர் வந்துவிட்டது. இருந்த போதும் குளத்தில் சிலர் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் தண்ணீர் மாசுபட்டு வருகின்றது. இதனை ஊராட்சி நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

The post பட்டிவீரன்பட்டி அருகே 40 ஆண்டுக்குப்பின் நிரம்பிய குளம்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,Manthaikulam ,Chittarevu ,
× RELATED விவசாயிகள் சங்க கூட்டம்